துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
— சங்கீதம் 1:1–6
சர்வ வல்லமையுள்ள பரலோகப் பிதாவே,
உம்முடைய பரிசுத்த சந்நிதியில் இந்த இனிய தருணத்தில்
நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம்.
சர்வ வல்லமையுள்ள பரலோகப் பிதாவே,
உம்முடைய பரிசுத்த சந்நிதியில் இந்த இனிய தருணத்தில்
நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம்.
யாழினி மற்றும் சச்சின் ஆகிய இவர்களை உம்முடைய சித்தத்தின்படி ஒன்றுபடுத்தினதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். “தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக” என்ற உம்முடைய வசனத்தின்படி அவர்களுடைய வாழ்வை உறுதியாக நடத்துவீராக.
இன்று நடைபெறும் இந்த வரவேற்பு விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் உம்முடைய நாமத்திற்கே மகிமை உண்டாக்குவதாக.
எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபித்து வேண்டுகிறோம். ஆமேன்.
ஸ்தோத்திரம் இயேசு நாதா
வான துதர் சேனைகள்
இன்றைத் தினமதிலும்
நீரல்லால் எங்களுக்குப்
🎶 ஆராதனைப் பாடல்
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு!
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
அல்லேலூயா கர்த்தரையே
ராஜாதி ராஜனாம் இயேசு ராஜா
தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
🎶 ஆராதனைப் பாடல்
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லேரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா, அல்லேலுயா தேவனைத் துதியுங்கள்
இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?
1. செங்கடலை நீர் பிளந்து
2. தூதர்கள் உண்ணும் உணவால்
3. கனமலையை நீர் பிளந்து
🎶 ஆராதனைப் பாடல்
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?
உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப்போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உந்தன் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் இங்கு கூடியிருக்கும் தேவபிள்ளைகளாகிய உங்களையெல்லாரையும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இந்த இனிய திருமண வரவேற்பு விழாவிற்கு மனமார்ந்த வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறோம்.
யாழினி மற்றும் சச்சின் ஆகிய இவர்களின் வாழ்க்கைப் பயணத்தின் இந்த சிறப்பான நாளில் உங்கள் அருமையான நேரத்தை ஒதுக்கி அவர்களை ஆசீர்வதிக்க வந்ததற்காக உங்களுக்கு எங்களின் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கிறோம்.
இன்று நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கர்த்தருடைய மகிமைக்காகவும், இவர்களின் வாழ்விற்கு ஆசீர்வாதமாகவும் அமையக்கடவதாக எங்கள் ஜெபம்.
கர்த்தர் உங்களையெல்லாரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களை கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்.
கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.
கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார். நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய்; நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
இன்று நான் உனக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்; நீ கீழாகாமல் மேலாவாய்.
— உபாகமம் 28:1–14
“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்;
அவனவனுடைய கிரியைகளின்படி
அவனவனுக்கு நான் அளிக்கும் பலன்
என்னோடேகூட வருகிறது.”
— வெளிப்படுத்தின விசேஷம் 22:12
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து,
உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல்
பிரகாசிக்கப்பண்ணி,
உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல்
பிரசன்னமாக்கி,
உனக்குச் சமாதானம்
கட்டளையிடக்கடவர்.
— எண்ணாகமம் 6:24–26
இன்றைய இந்த இனிய மற்றும் அர்த்தமுள்ள தருணத்தை எங்களுக்கு அருளிய சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முதன்முதலில் எங்களின் ஸ்தோத்திரங்களையும் நன்றிகளையும் செலுத்துகிறோம்.
யாழினி மற்றும் சச்சின் ஆகிய இவர்களின் வாழ்க்கையின் இந்த சிறப்பு நாளில் நேரில் கலந்து கொண்டு, அன்பாலும் ஜெபத்தாலும் அவர்களை ஆசீர்வதித்த அனைத்து உறவினர்கள், நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் உழைத்து உதவிய அனைவருக்கும், பாடல்கள், செய்தி, ஜெபங்கள் மூலம் ஆசீர்வாதமாக இருந்த அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்.
கர்த்தர் உங்களையெல்லாரையும் நிறைந்த ஆசீர்வாதங்களால் பலப்படுத்துவாராக. ஆமேன்.
பரலோகப் பிதாவே, இன்றைய இந்த இனிய வரவேற்பு விழாவை உம்முடைய கிருபையாலும் பிரசன்னத்தாலும் நடத்தினதற்காக உமக்கு எங்களின் நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறோம்.
யாழினி மற்றும் சச்சின் ஆகிய இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை உம்முடைய கைகளில் ஒப்படைக்கிறோம். அவர்கள் நடக்கும் ஒவ்வொரு அடியிலும் உம்முடைய வழிநடத்தலும் சமாதானமும் அவர்களுடன் இருந்து நடத்துவீராக.
இங்கு கூடியிருந்த அனைவரும் உம்முடைய ஆசீர்வாதங்களோடும் பாதுகாப்போடும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பச் செய்வீராக.
இவ்வெல்லாவற்றையும் எங்கள் கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபித்து வேண்டுகிறோம். ஆமேன்.